![]() | 2023 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | வழக்கு |
வழக்கு
குரு மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்பதால் ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை சந்திக்க நேரலாம். விவாகரத்து, குழந்தை காவல் அல்லது ஜீவனாம்சம் சார்ந்த வழக்குகள் உங்களுக்கு பண இழப்பை ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும் உங்களுக்கு ஏற்படுத்தலாம். நீங்கள் உங்கள் மீது எந்த தவறும் இல்லை இல்லை என்றாலும் குற்றம் சாட்டப்படுவீர்கள். கிரிமினல் வழக்கில் இருந்து உங்களால் வெளியில் வர முடியாமல் போகலாம்.
ஏப்ரல் 21, 2023 க்கு மேல் நிலுவையில் இருக்கும் வழக்கில் நீங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பீர்கள். குரு மற்றும் ராகு இணைந்து ஏப்ரல் 21, 2023 முதல் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள். இதனால் பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் வழக்கில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் வழக்கு சார்ந்த விடயங்களில் நீங்கள் நல்ல செட்டில்மெண்டையும் பெறுவீர்கள்.
செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் விடயங்கள் எந்த முன்னேற்றமும் இன்றி தேக்கம் அடையலாம். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெற முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic