2023 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

காதல்


ஜனவரி 202௦ முதல் இருக்கும் ஏழரை சனியின் இறுதி பாகத்தின் கடைசி பாகத்தில் நீங்கள் உள்ளீர்கள். இந்த புத்தாண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இல்லாமல் போகலாம். நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிய நேரலாம் என்பதால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். ஏப்ரல் 21, 2023 வரை புதிய உறவைத் தொடங்க இது ஏற்ற காலமாக இல்லாமல் இருக்கலாம்.
திருமணம் ஆனவர்கள் அன்யுனியம் குறைந்து காணப்படுவார்கள். குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரமாக இல்லாமல் இருக்கலாம். IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், அது உங்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். குரு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 21, 2023 அன்று பெயர்ச்சி ஆனதும் நீங்கள் விரைவாக மீண்டும் உங்கள் சக்தியின் அளவைப் பெறுவீர்கள்.


செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டம் உங்களுக்கு உங்கள் காதல் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சி தரும் காலமாக இருக்கும். நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிந்து இருந்தால், மீண்டும் அவருடன் இணைந்து உங்கள் வாழ்க்கையைத் தொடர இது ஏற்ற காலமாக இருக்கும். புதிய உறவைத் தொடங்க இது நல்ல நேரம். திருமணம் ஆனவர்கள் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பார்கள். நீண்ட காலமாக நீங்கள் குழந்தை பேறுக்காக காத்திருந்தால், அதற்கான பாக்கியத்தை இப்போது பெறுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை கிடைத்து நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் எதை செய்தாலும் அதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்து பின்னர் செயல்பட வேண்டும்.


Prev Topic

Next Topic