![]() | 2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2023 புத்தாண்டு பலன்கள் – Sagittarius – தனுசு ராசி
இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும், சனி பகவான் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிலும், ராகு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும் மற்றும் கேது உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். இதனால் உங்களுக்கு கலந்த பலன்கள் கிடைக்கும். நீங்கள் சோதனை காலத்தின் இறுதி பாகத்தில் உள்ளீர்கள். சனி பகவான் ஜனவரி 16, 2023 அன்று பெயர்ச்சி ஆவதால் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் உண்டாகும். நீங்கள் ஏழரை சனியின் ஏழரை ஆண்டு காலத்தை முடிக்கப் போகின்றீர்கள். இதனால் அடுத்த இரண்டரை ஆண்டு காலத்திற்கு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
ஜனவரி 16, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் கிரகங்களின் சாதகமான அமைப்பால் உங்களுக்கு ராஜ யோகம் உண்டாகும். நீங்கள் எதை செய்தாலும் அதில் வெற்றி உண்டாகும். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் ஏற்படும் வளர்ச்சியால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் புது வேடு வாங்கி குடி பெயருவீர்கள். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களை பணக்காரராக மாற்றும். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும்.
செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. ஆனால் நவம்பர் 4, 2023 க்கு பிறகு நீங்கள் நல்ல பலனைப் பார்ப்பீர்கள். மொத்தத்தில் இந்த 2023 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும். விஷ்ணு சஹாசார நாமம் கேட்பதால் உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாவீர்கள்.
Prev Topic
Next Topic