![]() | 2023 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை பொற்காலம் (95 / 100)
சனி பகவான் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும், ராகு மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும் மற்றும் கேது உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் இந்த பாகத்தில் உங்களுக்கு ராஜ யோகம் உண்டாகும். இதனால் நீங்கள் எதை செய்தாலும் அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் இந்த பாகத்தில் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழலை காண்பீர்கள். உங்கள் வளர்ச்சி தொடர்ந்து இருந்து கொண்டே யுர்க்கும்.
உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் இருந்து, உடல்நலம், குடும்பம் உறவுகள், உத்தியோகம், வணிகம், நிதி நிலை, வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் போன்றவற்றில் நீங்கள் நலல் வெற்றியைப் பெறுவீர்கள். ஊடகம், விளையாட்டு, அல்லது அரசியலில் இருப்பவர்கள் நல்ல புகழைப் பெறுவார்கள். நீங்கள் ஒரு பிரபலமாகும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. உங்கள் படம் வெளிவர இருந்தால், அது பெரும் அளவு வெற்றிப் பெரும்.
ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தில் நீங்கள் விண்ணைத் தொடும் லாபத்தைப் பெறுவீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், இந்த பாகத்தில் நீங்கள் பணக்காரராகும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. உங்களுக்கு பண மழைப் பொழியும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. பூர்வீக சொத்துக்கள், அதிர்ஷ்ட்ட சீட்டு, சூதாட்டம் போன்றவற்றில் நல்ல அதிர்ஷ்டமும் மற்றும் வழக்கு அல்லது இன்சூரன்ஸ் போன்றவற்றில் இருந்து நல்ல செட்டில்மென்ட் கிடைக்கவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் நீங்கள் செட்டிலாக முயற்சி செய்ய வேண்டும். உங்களால் முடிந்த நேரத்தையும் மற்றும் பணத்தையும் தானம் தர்மம் மற்றும் நற்காரியங்கள் செய்ய செலவிட முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic