2023 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

வேலை / உத்தியோகம்


ராகு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும், குரு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் சனி பகவான் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது மிகவும் ஒரு பாதகமான நிலையாக இருந்திருக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கை அலுவலகத்தில் நடக்கும் மிகவும் மோசமான அரசியல், வேலை பளு மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும். உங்கள் உயர் நிலை மேலாளர் உங்களது செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார். ஆனால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் ஜனவரி 16, 2023 அன்று உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகின்றார் என்பது தான். நீங்கள் ஏழரை சனி காலத்தை முடித்துவிட்டீர்கள். அதனால் அடுத்த இரண்டரை ஆண்டு காலத்திற்கு நீங்கள் உங்கள் உத்தியோக வளர்ச்சியில் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீங்கள் இதனால் நீண்ட கால இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி செயல்படத் தொடங்கலாம்.
குரு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 21, 2023 அன்று பெயர்ச்சி ஆவதால் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது நல்ல நேரமாக இருக்கும். உங்களுக்கு சிறப்பான சம்பளம் மற்றும் பதவியுடன் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த நிலைக்கு நீங்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு மற்ற சக ஊழியர்களுடன் இருக்கும் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் அலுவலகத்தில் இருந்து நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், விசா மற்றும் குடியேற்றம் சார்ந்த பலன்கள் கிடைக்கும் விடயங்களில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். அலுவலத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமாவே இருக்கும்.



செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் வளர்ச்சியில் சற்று வேகம் குறையலாம். ஆனால் உங்கள் உத்தியோகத்தில் இருக்கும் வளர்ச்சி நவம்பர் 4, 2023 முதல் மீண்டும் வேகம் எடுக்கும், மேலும் இந்த வளர்ச்சி அடுத்த ஆண்டு 2024 வரை தொடர்ந்து இருக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு நல்ல நிலையில் செட்டிலாக இது ஒரு சிறப்பான ஆண்டாக உங்களுக்கு இருக்கும்.




Prev Topic

Next Topic