![]() | 2023 புத்தாண்டு வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்பு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்பு |
வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்பு
இந்த ஆண்டின் தொடக்கம் தொழில்முனைவோர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் பலத்தை முற்றிலுமாக இழப்பார்கள். பல ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும் முயற்சியில் நீங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பெறுவீர்கள். பண வரத்து உங்களுக்கு போதுமான அளவு இருக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், உங்கள் வணிகத்திற்கு நீங்கள் பல சிறப்பான சலுகைகளைப் பெறுவீர்கள். அத்தகைய சலுகைகள் உங்களை ஒரு பணக்காரராகவும் மாற்றலாம். ஆனால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனும் இருக்க வேண்டும்.
உங்கள் வணிகத்தில் ஏற்படும் வளர்ச்சியால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களது நீண்ட கால இலக்குகளை அடையும் முயற்சியில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். புதிய தயாரிப்பை வெளியிட இது நல்ல நேரமாக இருக்கும். வங்கி மற்றும் புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து உங்களுக்கு போதிய நிதி உதவிகள் கிடைக்கும். சமுதாயத்தில் நீங்கள் நல்ல செல்வாக்கையும் மற்றும் புகழையும் பெறுவீர்கள். ஃப்ரீலான்ஸர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கு கிடைக்கும் புகழ் மற்றும் நிதி வெகுமதிகளால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு இந்த அதிர்ஷ்டங்கள் தொடரும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 21, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரையிலான காலகட்டத்தில் அர்தாஷ்டம சனியின் தாக்கம் அதிகமான உணரப்படும். இதனால் உங்களுக்கு கிடைத்த நல்ல ப்ரோஜெக்ட்டுகளை நீங்கள் உங்கள் போட்டியாளர்களிடம் உங்களுக்கு எதிரான சதியால் இழக்க நேரலாம். உங்கள் வணிக பங்குதாரருடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். வணிக முதலீடுகளில் நீங்கள் பணத்தை இழக்க நேரலாம். செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் முக்கிய கிரகங்கள் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு தற்காலிகமாக நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை உடல்நலம் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் (40 / 100)