![]() | 2023 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கல்வி |
கல்வி
குரு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும் சனி பகவான் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும் மற்றும் ராகு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு ராஜ யோகத்தை உண்டாக்குவார்கள். உங்களுக்கு இதனால் எளிதாகவே நல்ல சிறந்த கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் சேர இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் வாய்ப்பு கிடைக்கும். வரும் நாட்களில் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய நல்ல புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உங்கள் நண்பர்களுடன் நீங்கள் நல்ல நெருங்கிய நட்புடன் இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முதுகலை பட்டம் மற்றும் Ph.D படிக்கும் மாணவர்கள் ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் தங்கள் தீசிஸ் ஒப்புதல் பெற்று பட்டப்படிப்பை முடிப்பார்கள்.
ஆனால் ஏப்ரல் 21, 2023 முதல் விடயங்கள் உங்களுக்கு சாதகம் இல்லாமல் மாறலாம். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகள் ஏற்படலாம். உங்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் போகலாம். நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு தற்காலிகமாக சற்று நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை உடல்நலம் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் (40 / 100)