2023 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்



இந்த 2023 புத்தாண்டின் தொடக்கம் உங்களுக்கு உறவுகள் சார்ந்த விடயங்களுக்கு மகிழ்ச்சி தரும் காலமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தகைள் மற்றும் உறவினர்களுடன் நீங்கள் மகிழ்சியாக இருப்பீர்கள். அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். எனவே நீங்கள் ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வருவார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்தும் விடயங்களில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும்.


உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்கள் கனவு சுற்றுலா சென்று வர இது ஏற்ற நேரம். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் கனவு இல்லத்தை நீங்கள் வாங்குவீர்கள். புது வீட்டிற்கு குடி பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் வேறு நகரம் அல்லது நாட்டில் வாழ்பவராக இருந்தால், உங்கள் பெற்றோர்கள் உங்களைக் கான உங்கள் இடத்திற்கு வருகைத் தருவார்கள். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஏப்ரல் 21, 2023 வரை உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு எதிரான திருப்பங்கள் ஏற்படத் தொடங்கும். அர்தஷ்டம சனியின் பாதகமான தாக்கங்களை நீங்கள் இந்த காலகட்டத்தில் உணருவீர்கள். உங்கள் குடும்பத்தில் புதிய பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கமாட்டார்கள். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களும் மற்றும் சண்டைகளும் ஏற்படலாம். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் குறையும். ஆனால், நவம்பர் 4, 2023 க்கு மேல் இந்த ஆண்டின் இறுதி வரை நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.



Prev Topic

Next Topic