2023 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

நிதி / பணம்


குரு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும், ராகு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ராஜ யோகம் உண்டாகும். இதனால் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு நீங்கள் பண மழையை எதிர்பார்க்கலாம்., ஜனவரி 1, 2023 முதல் மார்ச் 31, 2023 வரை உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பண வரத்து பல வழிகளில் இருந்தும் உங்களுக்கு வரும். நீங்கள் முன்பு வேலை பார்த்த நிறுவனம், இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது வழக்கு போன்றவற்றில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செட்டில்மென்ட் தொகை கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் முற்றிலுமாக வெளியில் வந்துவிடுவீர்கள்.
உங்கள் வங்கிக் கடன் மேலும் எந்த தாமதமும் இன்றி ஒப்புதல் பெரும். உங்கள் குடும்பத்தினர்களுக்கு தங்க நகைகள் வாங்குவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் சேமிப்பு கணக்கில் நீங்கள் போதிய பண இருப்பை வைத்திருப்பீர்கள். புது வீட்டிற்கு குடி பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஜனவரி 1, 2023 முதல் ஜனவரி 16, 2023 வரை நீங்கள் அதிர்ஷ்ட்ட சீட்டு போன்றவற்றில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம். புது கார் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகரித்துக் கொள்ள இது ஏற்ற நேரம். ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.


அர்தஷ்டம சனியின் தாக்கமும் மற்றும் குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்படும் தாக்கமும் ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு உங்கள் நிதி நிலையை பாதிக்கலாம். இதனால் உங்கள் நிதி தேவைகளை சமாளிப்பதற்காக நீங்கள் பணம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். உங்களுக்கு கடன் தருபவர்கள் வட்டி விகிதத்தை அதிகரிப்பார்கள். உங்கள் சொத்து வரை அதிகரிக்கும், மேலும் உங்கள் நிதி சுமையும் அதிகரிக்கலாம். நீங்கள் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு ஏற்படக்கூடிய தேவையற்ற செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
உங்களுக்கு இருக்கும் நிதி பிரச்சனைகள் செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் சற்று குறையும். ஆனால் இது தற்காலிகமான ஒன்று தான். நவம்பர் 4, 2023 க்கு மேல் உங்களுக்கு மீண்டும் கடந்தால் அதிகரிக்கலாம். இதனால் இந்த ஆண்டின் இறுதியில் நீங்கள் பீதி அடையும் நிலையிலும் உங்களுக்கு கடன்கள் அதிகரித்து இருக்கலாம்.



Prev Topic

Next Topic