![]() | 2023 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2023 முதல் ஜனவரி 17, 2023 வரை பொற்காலம் (100 / 100)
100 க்கு 100 பெறுவது என்பது ஒருவருக்கு பத்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்ககூடிய வாய்ப்பாக இருக்கும். ஆனால், இத்தகைய வாய்ப்பை நீங்கள் அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் முழு பலத்துடன் சஞ்சரிப்பதால் மட்டுமே பெறுகின்றீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பாகமாக இருக்கும். நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். அப்படி உங்களால் நல்ல அதிர்ஷ்டங்களை காண முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், குடும்பம், உறவுகள், உத்தியோகம், வணிகம், நிதி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் என்று அனைத்திலும் நீங்கள் மகிழ்ச்சியான சூழலைக் காண்பீர்கள். நீங்கள் ஊடகம், விளையாட்டு, அல்லது அரசியல் போன்ற துறையில் இருப்பவராக இருந்தால், நல்ல புகழைப் பெறுவீர்கள் மேலும் ஒரு பிரபலமாகும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. உங்கள் படம் வெளிவர இருந்தால், அது பெரும் அளவு வெற்றியைப் பெரும்.
ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தில் நீங்கள் விண்ணைத்தொடும் லாபத்தை காண்பீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் இந்த பாகத்தில் பணக்காரராகும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. உங்களுக்கு பணமழை பொழியும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. பூர்வீக சொத்துக்கள், அதிர்ஷ்ட்ட சீட்டு, சூதாட்டம், அல்லது வழக்கு அல்லது இன்சூரன்ஸ் போன்றவற்றில் இருந்து செட்டில்மென்ட் தொகை என உங்களுக்கு அதிர்ஷ்ட்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்புகளை நீங்கள் பற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் நீங்கள் செட்டிலாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் நேரத்தையும் பணத்தையும் தானம் மற்றும் தர்மம் போன்ற நற்காரியங்கள் செய்ய பயன்படுத்தலாம்.
Prev Topic
Next Topic
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை உடல்நலம் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் (40 / 100)