![]() | 2023 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 04, 2023 முதல் நவம்பர் 04, 2023 வரை சிறப்பான முன்னேற்றம் (65 / 100)
இந்த பாகத்தில் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள். குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைந்த நிலையில் சஞ்சரிப்பார்கள். நீங்கள் அறுவைசிகிச்சை செய்ய இருந்தால், அதற்கு இது மிகவும் ஏற்ற நேரமாக இருக்கும். நீங்கள் இந்த பாகத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு சிறப்பாக இருக்கும். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம்.
உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் இலகுவாகும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் நல்ல மாற்றங்களை பார்ப்பீர்கள். இருப்பினும், இந்த நேர்மறை மாற்றங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். எனவே வளர்ச்சியை எதிர்பார்ப்பதை விட உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் நல்ல நிலையை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இருக்கும் தேவையற்ற செலவுகள் குறையும்.
நீங்கள் குடி பெயர தயாராக இருக்கும் சொத்துக்களை வாங்க முயற்சி செய்யலாம். ஆனால் அக்டோபர் 15, 2023 க்கு முன் நீங்கள் பரிவர்த்தனைகளை முடித்து விட முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பங்குச்சந்தை முதலீடுகள் இந்த பாகத்தில் சிறப்பாக இருக்கும். ஆனால், நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக பங்குசந்தையை விட்டு வெளியேர முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை உடல்நலம் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் (40 / 100)