![]() | 2023 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | உடல்நலம் |
உடல்நலம்
முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் உங்கள் உடல்நலம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருக்கும் நாள்பட்ட நோய்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். நீங்கள் அதிக தன்னம்பிக்கையைப் பெறுவீர்கள். வரும் நாட்களில் உங்களுக்கு எந்த பயமும் பதற்றமும் இருக்காது. உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் உடல்நலத்தில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். நீங்கள் அறுவைசிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், அதனால் விரைவாக குணமடைவீர்கள். அழகு சார்ந்த மற்றும் உங்கள் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ளவும் நீங்கள் அறுவைசிகிச்சை செய்து கொள்ளலாம். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பதால் மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு இந்த அதிர்ஷ்ட்டம் தொடரும்.
ஆனால் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் மற்றும் குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் உடல்நலத்தை மிகவும் மோசமாக பாதிப்பார்கள். உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மருத்துவ செலவுகள் பெரும் அளவு அதிகரிக்கும். உங்களுக்கு இரத்த கொதிப்பு, கொழுப்பு சத்து மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இன்னல்கள் ஏற்படலாம். நீங்கள் சரியான உணவு முறையை கடைப்பிடித்து போதுமான அளவு உடற்பயிற்சி செய்து வருவதால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
செப்டம்பர் 4, 2023 முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். ஆனால் நவம்பர் 4, 2023 க்கு பிறகு உங்களுக்கு ஒரு சோதனை காலமாக இருக்கும். நீங்கள் சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக உணருவீர்கள்.
Prev Topic
Next Topic
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை உடல்நலம் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் (40 / 100)