2023 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

காதல்


காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் பொற்காலத்தை காண்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், புதிய உறவைத் தொடங்க இது ஏற்ற நேரமாக இருக்கும். உங்கள் நண்பர்களுடன், குடும்பத்தினர்களுடன் மற்றும் உறவினர்களுடன் வெளியில் செல்வதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு உங்கள் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள்.


நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையைப் பார்க்க இது ஏற்ற காலம். திருமணம் ஆனவர்கள் நல்ல புரிதலுடனும் நல்ல மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். நீண்ட காலமாக நீங்கள் குழந்தை பேறுக்காக காத்திருந்தால் அதற்கான பாக்கியத்தை நீங்கள் பெறுவீர்கள். இயற்கையாகவே குழந்தை பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் IVF அல்லது IUI போன்ற மருத்துவ சிகிச்சையை முயற்சிக்க வேண்டும் என்றால், அதற்கு ஏப்ரல் 21, 2023 வரை நல்ல அதிர்ஷ்ட்டம் நிறைந்த காலமாக உங்களுக்கு இருக்கும்.


ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை நீங்கள் எந்த அதிர்ஷ்டத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். சாதகமற்ற குரு மற்றும் சனி பெயர்ச்சியால் நீங்கள் நல்ல பலனை இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. உங்களுக்கு திருமணம் நிச்சயமாகி ஆனால் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்றால், இருவீட்டார் தரப்பிலும் குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்படலாம். செப்டம்பர் 4,. 2023 முதல் உங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். மீண்டும் நவம்பர் 4, 2023 முதல் அடுத்த 2024 வரை உங்களுக்கு அதே பிரச்சனைகள் தொடரலாம்.

Prev Topic

Next Topic