2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


2023 புத்தாண்டு பலன்கள் – விருச்சிக ராசி (Scorpio Moon Sign).
இந்த புத்தாண்டு உங்களுக்கு ராஜ யோகத்துடன் தொடங்குகிறது. குரு உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதன் பலத்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இப்போது பொற்காலத்தை பெற்றிருப்பீர்கள். சனி பகவான் ஜனவரி 16, 2023 அன்று பெயர்ச்சியாவது உங்களுக்கு நல்ல செய்தி அல்ல. ஆனால் குரு தொடர்ந்ட்பு ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தருவார்.


உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். அடுத்த நிலைக்கு நீங்கள் எளிதாக முன்னேற உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயருவீர்கள். உங்கள் பங்குச்சந்தை வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு இருக்கும் இந்த நல்ல நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகி விடுவதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அர்தஷ்டம சனியின் பாதகமான தாக்கம் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை அதிகமாக உணரப்படும். இது உங்களுக்கு ஒரு கடுமையான சோதனை காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக தடைகளையும் மற்றும் ஏமாற்றங்களையும் காண்பீர்கள். உங்கள் உடல் நலம் அதிகரிக்கும் வேலை பளு மற்றும் பதற்றத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். தவறான முதலீட்டு தேர்வுகளாலும் எதிர்பாராத செலவுகளாலும் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம்.


செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரை உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். ஆனால் நவம்பர் 4, 2023 க்கு மேல் உங்களுக்கு நேரம் சிறப்பாக இல்லை. எனவே ஏப்ரல் 21, 2023 க்கு முன் நீங்கள் அர்தஷ்டம சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள உங்களை தயார் படுத்திக்கொள்ள முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும்.

Prev Topic

Next Topic