2023 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


ஊடகத்துறையில் இருப்பவர்கள் குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வையிடுவதன் காரணத்தால் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவார்கள். நீங்கள் நல்ல உற்சாகத்துடன் இருப்பதால் மக்களும் ஊடகமும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். உங்களுக்கு பெரிய படங்களில் இருந்து சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவர இருக்கும் உங்கள் படம் பெரும் அளவு வெற்றியைப் பெரும்.
அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். நீங்கள் உங்கள் கட்சியில் ஒரு முதன்மை பதவியில் இருப்பீர்கள். உங்களுக்கு இருக்கும் புகழ் அதிகரிக்கும். மக்களிடம் இருந்து உங்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். ஏதேனும் சட்ட சிக்கல்கள் உங்களுக்கு இருந்தால் அல்லது வருமான வரி பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், அதில் இருந்து முற்றிலுமாக வெளியில் வந்துவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் உங்களுக்கு இருக்கும் உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு இந்த அதிர்ஷ்டங்கள் தொடரும்.


ஆனால் ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் அதிக சவால்களை சந்திக்க நேரலாம். மேலும் சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் தாக்கமும் அதிகம் உணரப்படும். ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு நீங்கள் ஏதேனும் நீண்ட கால ப்ரோஜெக்ட்டை தொடங்க வேண்டும் என்றால், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தை பார்க்க வேண்டும். திரைப்படத் தயாரிப்பலார்கள் மற்றும் விநியோகத்தர்கள் அர்தஷ்டம சனியின் தாக்கத்தால் ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.


Prev Topic

Next Topic