2023 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை நல்ல அதிர்ஷ்டங்கள் ஆனால் வேலை பளுவுடன் (80 / 100)


ஜனவரி 17, 2023 முதல் உங்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டு காலத்திற்கு அர்தஷ்டம சனி காலம் தொடங்க உள்ளது. ஆனால் இப்போது இதன் தாக்கத்தை நீங்கள் பெற மாட்டீர்கள். குரு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும் மற்றும் ராகு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே, நீங்கள் இந்த பாகத்தில் நல்ல அதிர்ஷ்டங்களைக் காண்பீர்கள். உங்களுக்கு அர்தஷ்டம சனி காலம் தொடங்கி உள்ளதால், நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால், உங்கள் வேலைகளை நீங்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதற்கான வெகுமதிகளையும் இந்த பாகத்தில் பெறுவீர்கள்.
உங்களுக்கு போதிய தூக்கம் இல்லாமல் இருக்கும். நீங்கள் அதிக நார் சத்து மற்றும் புரத சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நல்ல ஆதரவாக இருப்பார்கள். புது வீட்டிற்கு குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவு செய்வதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தைகள் பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


உங்கள் அலுவலகத்தில் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவீர்கள். நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்து பதவி உயர்வு உங்களுக்கு இப்போது கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் நிதி நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பண வரத்து போதுமான அளவு இருக்கும். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் மற்றும் ஆப்சன் வர்தகம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும். உங்களுக்கு கிடைத்துள்ள இந்த நேரத்தை நீங்கள் திறன்பட பயன்படுத்திக் கொண்டு உங்கள் உத்தியோகத்தில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சி செய்ய வேண்டும்.


Prev Topic

Next Topic