![]() | 2023 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை உடல்நலம் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் (40 / 100)
ராகு நல்ல நிலையில் சஞ்சரித்தாலும் கூட, உங்களுக்கு இந்த பாகத்தில் நண்பர்களிடம் இருந்து மட்டுமே சில உதவிகள் கிடைக்கும். ஏனென்றால், குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். இதனால் உங்களுக்கு வயிற்றில் பிரச்சனைகள், கல்லீரலில் சிக்கல்கள், அதிகரித்த கொழுப்பு சத்து மற்றும் சர்க்கரையின் அளவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கான மூல காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் உத்தியோக வாழ்க்கை அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் பாதிக்கப்படலாம். நீங்கள் உங்கள் மறைமுக எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் அரசியலால் உங்கள் மன நிம்மதியை இழக்க நேரலாம். உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அது உங்களுக்கு எதிராக மாறலாம். நீங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இழக்க நேர்ந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. உங்களுக்கு கிடைக்க இருக்கும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தாமதமாகலாம். நீங்கள் இந்த காலகட்டத்தில் உங்கள் உத்தியோகத்தை மாற்ற நினைக்கும் முயற்சியை தவிர்க்க வேண்டும்.
உங்கள் நிதி நிலை இந்த காலகட்டத்தில் பாதிக்கப்படலாம். உங்கள் சேமிப்புகள் விரைவாக கரையலாம். இருப்பினும், நீங்கள் இந்த பாகத்தில் அர்தஷ்டம சனியின் தாக்கத்தை உணர மாட்டீர்கள். எனவே, உங்களால் பணம் கடன் வாங்காமல் உங்கள் செலவுகளை சமாளித்துவிட முடியும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. கட்டுமான ப்ரோஜெக்ட்டுகளைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் புது வீடு கட்ட முன் தொகை கொடுக்க இருந்தால், அது சார்ந்த விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு இந்த பாகத்தில் நிதி இழப்பை ஏற்படுத்தலாம். ரிஸ்க்கான முடிவுகளை எடுப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்கள் உடல்நலத்தின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் உங்கள் குடும்பத்தினர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை உடல்நலம் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் (40 / 100)