2023 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்



பங்குச்சந்தை முதலீடுகள் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். ராகு, குரு மற்றும் சனி பகவானின் இணைந்த நேர்மறை தாக்கத்தால் நீங்கள் குறுகிய காலத்திலேயே பணக்காரராகும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இதனால் நீங்கள் ஜனவரி 1, 2023 முதல் ஜனவரி 16, 2023 வரையிலான காலகட்டத்தில் நல்ல விண்ணைத்தொடும் லாபத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஆப்சன் வர்த்தகம் மற்றும் லிவேரேஜ் வர்த்தகத்தில் ஜனவரி 1, 2023 முதல் ஜனவரி 16, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு கோட்டீஸ்வரராகும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது.


ஜனவரி 16, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் குருவின் பலத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். உங்கள் கனவு இல்லத்தை நீங்கள் கட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் சொத்துக்களில் நீங்கள் பணம் முதலீடு செய்யலாம். உங்கள் வங்கிக் கடன்கள் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்யவும் இது நல்ல நேரம். நீங்கள் உங்கள் சொத்துக்களை அதிக விலைக்கு விற்று குறைந்த விலையில் பல சொத்துக்களில் முதலீடு செய்யலாம். இதனால் உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். மேலும் அவ்வாறு வாங்கும் சொத்தின் மதிப்பும் சில நாட்களில் அதிகரிக்கும்.

ஏப்ரல் 21, 2023 முதல் அர்தஷ்டம சனியின் பாதகமான தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். நீங்கள் உங்கள் லாபத்தை பணமாக்கி பாதுகாப்பான வங்கி சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு நிதி போன்றவற்றில் போட்டுவைக்க முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை என்றால், உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை இழந்து நிதி இழப்புகளை ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் சந்திக்க நேரலாம்.



செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் இருக்கும் நேரத்தில் உங்களுக்கு சில முன்னேற்றம் ஏற்பட்டாலும் உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே உங்களால் நல்ல லாபத்தை எதிர்பார்க்க முடியும். ஏப்ரல் 21, 2023 முதல் இந்த 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக வெளியில் வந்துவிடுவது நல்ல யோசனையாக இருக்கும். அப்படி இல்லை என்றால், நீங்கள் இந்த ஆண்டின் இறுதியில் நிதி இழப்பை சந்திக்க நேரலாம்.

Prev Topic

Next Topic