2023 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்



பயணம் செய்ய இது ஏற்ற நேரம். நீங்கள் சாலை வழி பயணம் செய்ய திட்டமிடலாம். நீங்கள் விரும்பிய சுற்றுலா தளம் மற்றும் உலகப் பயணம் செய்யவும் திட்டமிடலாம். பயண சீட்டு, ஹோட்டல்கள் மற்றும் வாடகைக்கு கார் போன்ற விடயங்களில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்களுடன் சுற்றுலா செல்வதாலும் மற்றும் வணிகம் சார்ந்த பயணத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு நல்ல தங்கும் வசதிகள் கிடைக்கும். பயணத்தின் போது உங்கள் உடல்நலம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும். புது கார் வாங்க இது நல்ல நேரம்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிலுவையில் இருக்கும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். நீங்கள் கனடா அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேற்றம் சார்த்த விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், அதன் இறுதி ஒப்புதல் ஜனவரி அல்லது பெப்ரவரி 2023 வாக்கில் கிடைத்துவிடும். வெளிநாட்டிற்கு நீங்கள் குடிபெயருவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். விசா ஸ்டாம்பிங் செய்ய நீங்கள் உங்கள் தாய்நாட்டிற்கு பயணம் செய்யலாம். EAD, கிரீன் கார்டு, குடியுரிமை மற்றும் OCI போன்ற நீண்ட கால பலன்களும் உங்களுக்கு ஏப்ரல் 21, 2023 க்கு முன் ஒப்புதல் பெற்றுவிடும்.

ஏப்ரல் 21, 2023 ஐ நீங்கள் கடந்ததும் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்ட்டம் குறையும். எனவே நீங்கள் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் உடல்நலமும் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் குடியேற்ற மற்றும் விசா சார்ந்த பலன்கள் தேக்கம் அடையலாம். வெளிநாட்டில் போதிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இல்லாததால் நீங்கள் அதிக தனிமையை உணருவீர்கள். செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலட்டம் உங்களுக்கு ஓரளவு நன்றாக இருந்தாலும், நீங்கள் நவம்பர் 4, 2023 க்கு பிறகு சோதனை காலத்திலேயே இருப்பீர்கள்.




Prev Topic

Next Topic