![]() | 2023 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கல்வி |
கல்வி
குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேரம் சிறப்பாக இருக்கும். கேது உங்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளில் இருந்து வெளியில் வர உதவுவார். உங்களுக்கு சிறந்த கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் எளிதாக சேர வாய்ப்பு கிடைக்கும். வரும் நாட்களில் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்ககூடிய புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.
உங்கள் நண்பர்களுடன் நெருங்கிய நட்போடு இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். படிப்பிலும் விளையாட்டிலும் நீங்கள் பெரும் அளவு வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் இந்த 2023 ஆண்டின் தொடக்க மாதங்களில் விருதுகள் வெல்லவும் உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.
ஏப்ரல் 21, 2023 ஐ நீங்கள் அடைந்ததும் விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். நீங்கள் உங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால், கடினமாக உழைக்க வேண்டும். குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரித்து ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டங்களைக் குறைப்பார்கள். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர உங்களுக்கு சற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
Prev Topic
Next Topic