2023 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுடன் உங்களுக்கு இருக்கும் உறவில் ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் தற்காலிகமாக பிரிந்து இருந்தாலும், இப்போது அவர்களுடன் மீண்டும் இணைந்து உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். ஏப்ரல் 21, 2023 வரை சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் குடும்பம் சமுதயாத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும். உங்கள் குடும்பத்தினர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்று வர இது நல்ல நேரம். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.


ஏப்ரல் 21, 2023 க்கு முன் புது வீடு வாங்கி குடி பெயர நல்ல நேரமாக உள்ளது. உங்கள் பெற்றோர்களைச் சென்று சந்திக்கவும் உறவினர்களைச் சென்று சந்திக்கவும் இது நல்ல நேரமாக உள்ளது. ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மோசமான காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரை குரு வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் குறையும்.


Prev Topic

Next Topic