2023 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

நிதி / பணம்


இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் பண வரத்து உங்களுக்கு பல வழிகளில் இருந்தும் வரும். குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்கள் அதிர்ஷ்ட்டம் பல மடங்கு அதிகரிக்கும். நீங்கள் வேலை பார்த்த முந்தைய நிறுவனம், இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது வழக்கின் தீர்ப்பு போன்ற காரணத்தால் உங்களுக்கு செட்டில்மென்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். உங்கள் சேமிப்பு கணக்கில் பண இருப்பு அதிகரிக்கும்.
உங்கள் வங்கிக் கடன் விரைவாக ஒப்புதல் பெரும். உங்கள் வீட்டு கடனை நிதி மறுபரிசீலனைச் செய்யவும் இது நல்ல நேரம். உங்களுக்கு இருக்கும் கடன்கள் குறைந்து சேமிப்பு அதிகரிப்பதால் நீங்கள் மன நிம்மதியோடு இருப்பீர்கள். மேலும் நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள். உங்கள் கனவு இல்லத்திற்கு குடிபெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிர்ஷ்ட்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவை ஜனவரி 1, 2023 முதல் ஜனவரி 17, 2023 வரை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு கிடைக்கும் நிதி வளர்ச்சியால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


ஆனால் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நேரம் சிறப்பாக இல்லாமல் போகலாம். உங்களுக்கு தேவையற்ற மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உங்கள் சேமிப்புகள் விரைவாக கரையலாம். நீங்கள் உங்கள் நிதி தேவைகளுக்காக பணம் கடன் வாங்க வேண்டிய சூழலில் இருப்பீர்கள். முடிந்த வரை நவம்பர் மற்றும் டிசம்பர் 2023 மாதங்களில் பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதால் யாருக்கும் பணம் கடன் தராதீர்கள் மற்றும் யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்கவும் முயற்சி செய்யாதீர்கள்.


Prev Topic

Next Topic