![]() | 2023 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2023 முதல் ஜனவரி 17, 2023 வரை நல்ல அதிர்ஷ்டங்கள் (85/100)
அனைத்து முக்கிய கிரகங்களும் நலல் நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சரிப்பதால். இது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் நிரம்பிய பொற்காலமாக இருக்கும். நீங்கள் எதைச் செய்தாலும் அதில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பண மழைப் பொழியவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல்நலம், குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வருவார்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையைக் கண்டறிந்து திருமணம் செய்து கொள்ளவும் இது ஏற்ற காலமாக உள்ளது. திருமணம் ஆனவர்கள் நல்ல மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். நீண்ட காலமாக நீங்கள் குழந்தை பேருக்காக காத்திருந்தால், அதற்கான பாக்கியத்தை இயற்கையாகவோ அல்லது IVF போன்ற மருத்துவ சிகிச்சையாலோ பெறுவீர்கள்.
உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் போன்ற பலன்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களது விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். உங்களது நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் முற்றிலுமாக வெளியில் வந்துவிடுவீர்கள். புது வீடு வாங்குவது மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வது போன்ற விடயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். உங்களுக்கு வெளிநாட்டிற்கு பயணம் செய்ய எளிதாக விசா கிடைத்துவிடும். வெளிநாட்டிற்கு குடிபெயரவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தில் நீங்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தையும் முயற்சி செய்து பார்க்கலாம்.
Prev Topic
Next Topic