2023 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

செப்டம்பர் 04, 2023 முதல் நவம்பர் 04, 2023 வரை சிறப்பான முன்னேற்றம் (65 / 100)


நீங்கள் இப்போது ராகு – கேது பெயர்ச்சியின் இறுதி பாகத்தில் உள்ளீர்கள். எனவே இந்த பாகத்தில் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள். குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைந்த நிலையில் சஞ்சரிப்பார்கள். நீங்கள் அறுவைசிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கு இது நல்ல நேரமாக இருக்கும். நீங்கள் இப்போது உங்கள் தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருக்கும். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்தலாம்.
உங்கள் வேலை பளு இலகுவாகும் மற்றும் பதற்றம் குறையும். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். இருப்பினும், உங்களுக்கு கிடைக்கும் நேர்மறை மாற்றங்கள் குறைந்த காலத்திற்கு மட்டுமே இருக்கும். எனவே அலுவலகத்தில் நீங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்பார்ப்பதை விட உங்கள் பதவி மற்றும் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது. உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இருக்கும் தேவையற்ற செலவுகள் குறையும்.


நீங்கள் குடிபெயர தயாராக இருக்கும் வீடு வாங்கி குடி பெயர முயற்சிக்கலாம். ஆனால் அக்டோபர் 15, 2023 க்கு முன் நீங்கள் உங்கள் பரிவர்த்தனைகளை முடித்து விட வேண்டும். பங்குச்சந்தை முதலீடுகள் இந்த பாகத்தில் நல்ல பலனைத் தரும். ஆனால் நீங்கள் உங்கள் பங்குகளை பாதுகாப்பாக விற்று விட்டு, வெளியேற இந்த இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்வது நல்ல யோசனையாக இருக்காது.


Prev Topic

Next Topic