![]() | 2023 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | உடல்நலம் |
உடல்நலம்
உங்களுக்கு இருக்கும் நாள்பட்ட வலி, மனக் கவலை மற்றும் பதற்றம் போன்றவற்றில் இருந்து இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவருவீர்கள் குரு மற்றும் கேது உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவார்கள். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு சக்தியின் அளவு அதிகரிக்கும்.
ஆனால் குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிற்கு பெயர்ந்து ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கும் போது ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். ஏப்ரல் 21, 2023 க்கு மேல் அறுவைசிகிச்சை செய்ய திட்டமிடுவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். போதிய மருத்துவ காப்பீடுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். ஆனால் அதன் பிறகு இந்த ஆண்டின் இறுதி வரை நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. மூச்சு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து நேர்மறை ஆற்றல்களை விரைவாக அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic