![]() | 2023 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | காதல் |
காதல்
குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்கள் காதல் வாழ்க்கைக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த ஆண்டு நீங்கள் காதலிக்கத் தொடங்க வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நீங்கள் வெளியில் செல்வதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தால், அதனை சரி செய்து நல்ல உறவை மீண்டும் தொடங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை நீங்கள் காண்பீர்கள். ஏப்ரல் 21, 2023 க்கு முன் உங்களுக்கு திருமணம் நடைபெறுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் ஆனவர்கள் நல்ல மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். நீண்ட காலமாக நீங்கள் குழந்தை பேறுக்காக காத்திருந்தால், அதற்கான பாக்கியத்தை இப்போது பெறுவீர்கள். இயற்கையாகோ அல்லது IVF ,அற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சையாலோ நீங்கள் குழந்தை பேறு பெரும் முயற்சியில் வெற்றிப் பெறுவீர்கள்.
ஆனால் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு சனி பகவானின் பாதகமான தாக்கம் அதிகமாக உணரப்படும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரையிலான காலகட்டத்தில் குறைவாக இருக்கும்.
Prev Topic
Next Topic