2023 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


ஊடகத்துறையில் இருப்பவர்கள் பெரிய ப்ரோஜெக்ட்டுகளில் இருந்து இப்போது நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் கேது உங்களுக்கு நல்ல உற்சாகத்தையும் ஆற்றலையும் தருவார். இதனால் மக்கள் உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் படம் இப்போது வெளிவர இருந்தால், அது பெரும் அளவு வெற்றிப் பெரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் இப்போது ஒரு பிரபலமாகும் வாய்ப்பும் உள்ளது. அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீங்கள் உங்கள் கட்சியில் தலைமைப் பொறுப்பைப் பெறுவீர்கள். மக்களிடம் இருந்து உங்களுக்கு நல்ல மதிப்புகள் கிடைக்கும்.
ஏதேனும் சட்டம் அல்லது வருமான வரி பிரச்சனைகளில் உங்களுக்கு தேக்க நிலை ஏற்பட்டிருந்தால், அதில் இருந்து ஜனவரி 2023 வாக்கில் வெளியில் வந்துவிடுவீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் நல்ல நிலையில் செட்டிலாகி விடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் உங்களுக்கு இருக்கும் உறவு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


குரு மற்றும் ராகு இணைந்து ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் உங்களுக்கு இருக்கும் உறவு பாதிக்கப்படலாம். நீங்கள் முன்பே ஒப்பந்தம் செய்திருக்கும் ப்ரோஜெக்ட்டுகள் உங்களுக்கு எதிரான சதியால் இரத்தாகலாம். செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். ஆனால் நவம்பர் 4, 2023 முதல் மீதமுழல் மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக இல்லாமல் போகலாம்.


Prev Topic

Next Topic