2023 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை வேலை பளு ஆனால் நிதி நிலையில் வெற்றி (75/100)


சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு இருக்கும் வேலை பளு இந்த பாகத்தில் அதிகரிக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டை பார்வை இடுவதால், உங்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல் போகலாம். ஆனால் குரு மற்றும் கேதுவின் பலத்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களால் உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலை சமாளித்து உங்கள் ப்ரோஜெக்ட்டுகளை சரியான நேரத்தில் முடித்துவிடுவீர்கள். குருவின் பலத்தால் உங்களது கடின உழைப்பிற்கேற்ற வெகுமதிகளை நீங்கள் பெறுவீர்கள். இந்த பாகத்தில் உங்களுக்கு அடுத்த நிலைக்கு முன்னேற பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
புது வீடு வாங்கி குடி பெயரவும் இது நல்ல நேரம். பங்குச்சந்தை முதலீடுகளிலும் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் அதிக பாதுகாப்பாக இருப்பதாக உணருவீர்கள். சுப காரியங்களை நிகழ்த்த இது நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல புகழையும் பெயரையும் பெரும். உங்களுக்கு இருக்கும் சட்ட பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். பயணம் செய்யவும் இது நல்ல நேரம். நீங்கள் வேறு நாட்டிற்கு குடிபெயரவும் உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு கிடைத்துள்ள இந்த நேரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகி விடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic