2023 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் பிரச்சனைகள் (45 / 100)


சமீப கடந்த மாதங்களில் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்ட்டம் குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் ஏப்ரல் 21, முதல் சஞ்சரிக்க உள்ளதால் இப்போது குறையலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு வேலை அழுத்தத்தையும் மற்றும் பதற்றத்தையும் ஏற்படுத்துவார்.
உங்கள் உடல்நலம் இந்த பாகத்தில் பாதிக்கப்படலாம். உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது அதிக கவனம் தேவை. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் அவரது உறவினர்களுடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்காலிகமாக பிரிந்துவிடும் சூழலும் ஏற்படலாம். குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்தலாம். ஆனால் செலவுகள் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகரித்து விண்ணைத்தொடும் அளவு போகலாம்.


உங்கள் உத்தியோக வாழ்க்கை அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் பாதிக்கப்படலாம். உங்கள் மறைமுக எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் சதியால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அது உங்களுக்கு எதிராக மாறலாம். அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் இழக்க நேர்ந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. உங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தாமதமாகலாம். நீங்கள் இந்த காலகட்டத்தில் உங்கள் உத்தியோகத்தை மாற்ற முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் நிதி தேவைகளுக்காக நீங்கள் பணம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். நீங்கள் உங்கள் அடிப்படைத் தேவைக்காக வீடு வாங்க முயற்சிக்கலாம். ஆனால் சந்தை விலையை விட நீங்கள் அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். சொத்துக்களில் முதலீடு செய்வதை இந்த காலகட்டத்தில் தவிர்த்துவிடுங்கள். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு அதிக இழப்புகளை இந்த காலகட்டத்தில் ஏற்படுத்தலாம்.



Prev Topic

Next Topic