2023 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


சனி பகவான் உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டிலும், குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் மற்றும் கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு ராஜ யோகத்தை உண்டாக்குகிறார்கள். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் கிரிப்டோ நாணயம் போன்ற வர்த்தகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். பங்குச்சந்தையில் தொழில்முறையில் வர்த்தகம் செய்பவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்பவர்கள் ஏப்ரல் 21, 2023 வரை நல்ல விண்ணைத்தொடும் லாபத்தைப் பெறுவார்கள்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஆப்சன் மற்றும் ப்யுச்சர் வர்த்தகம் செய்ய முயற்சிக்கலாம். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். ரியல் எஸ்டேட் சொத்துக்களில் நீங்கள் பணத்தை முதலீடு செய்ய முயற்சிக்கலாம். மேலும் உங்கள் சொத்துக்களை நீங்கள் அதிக விலைக்கு விற்று குறைந்த விலையில் பல சொத்துக்களை வாங்க முயற்சிக்கலாம். இதனால் உங்கள் அதிர்ஷ்டத்தையும் நீங்கள் அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கலாம்.


ஏப்ரல் 21, 2023 க்கு மேல் நீங்கள் ரிஸ்க் எடுப்பதை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை நீங்கள் முற்றிலுமாக பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து வெளியேற வேண்டும். குரு மற்றும் ராகு இணைந்து சஞ்சரிப்பதால் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் இது வரை சேர்த்து வைத்த லாபத்தை இழக்க நேரலாம். செப்டம்பர் 4, 2023 முதல் உங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும். ஆனால், நவம்பர் 4, 2023 க்கு மேல் மீண்டும் நீங்கள் உங்களுக்கு கிடைத்த லாபத்தை இழக்க நேரலாம்.


Prev Topic

Next Topic