2023 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

வேலை / உத்தியோகம்


இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் எந்த மாற்றங்கள் நடந்தாலும் அது உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உங்களால் உங்கள் குழுவை மாற்றிக் கொள்ள முடியும். மேலும் உங்கள் மேலாளரிடம் இருந்தும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும். நீங்கள் புதிய உத்தியோகத்திற்கு வின்னபிக்கவும் இது ஏற்ற நேரம். உங்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளம் மற்றும் பதவியுடன் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.
உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு உங்களுக்கு இப்போது கிடைக்கும். உங்கள் வளர்ச்சி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். மறைமுக எதிரிகளிடம் இருந்து எந்த பிரச்சனைகளும் இருக்காது, மேலும் உங்களுக்கு எதிரான எந்த சதிகளும் நடக்காது. உங்கள் உத்தியோக வாழ்க்கை சுமூகமாக இருக்கும். வெளிநாட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரம். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், உள்நாட்டிலேயே இடமாற்றம் மற்றும் குடியேற்றம் சார்ந்த பலன்களைப் பெறுவீர்கள்.


ஏப்ரல் 21, 2023 முதல் சாதகமற்ற ராகு, சனி பகவான் மற்றும் குருவின் நிலையால் நீங்கள் அதிக சவால்களை சந்திக்க நேரலாம். நீங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலை சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் உங்களுக்கு இருக்கும் உறவு பாதிக்கப்படலாம். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.
குரு செப்டம்பர் 4, 2023 அன்று வக்கிர கதி அடைந்ததும் விடயங்கள் சற்று முன்னேற்றம் பெரும். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் உத்தியோக வாழ்க்கையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும். ஆனால், குறிப்பிடத்தக்க எந்த வளர்ச்சியையும் நீங்கள் இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.



Prev Topic

Next Topic