2023 புத்தாண்டு வணிகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

வணிகம் மற்றும் முதலீடுகள்


தொழில்முனைவோர்கள் இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு நல்ல பண வரத்தை ஏற்படுத்தக்கூடிய பல ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். புதிய முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிக் கடன் போன்றவற்றால் உங்களுக்கு நிதிகள் கிடைக்கும். உங்கள் நிர்வாக செலவுகளை குறைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் லாபத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
உங்களது புதிய சந்தைப்படுத்தல் முயற்சிகள் ஊடகம் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்க்கும். ஜனவரி 2023 வாக்கில் நீங்கள் உங்களாது புதிய தயாரிப்புகளை வெளியிட முயற்சிக்கலாம். ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு நல்ல வாய்புகள் கிடைத்தாலும் அதில் ஆச்சரியபபட ஒன்றும் இல்லை. ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பணக்காரராகும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.


ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் அஷ்டம குருவின் காரணத்தால், நீங்கள் பல சவால்களை சந்திக்க நேரலாம். உங்கள் போட்டியாளர்களிடம் நீங்கள் உங்களுக்கு கிடைத்த நல்ல ப்ரோஜெக்ட்டுகளை இழக்க நேரலாம். உங்கள் பண வரத்து இதனால் பாதிக்கப்படலாம். உங்கள் வணிகத்தில் நிர்வாக செலவுகளை சமாளிக்க நீங்கள் பணம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் போட்டியாளர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது உங்களிடம் வேலை பார்க்கும் பணியாளர்கள் மற்றும் உங்கள் வணிக பங்குதாரர்களாலும் கூட நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்களுக்கு சட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம்.
உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் குறையும். நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வணிகத்தை முன்னேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்யலாம். ஆனால் மே 2024 வரை புதிதாக பணம் முதலீடு செய்வதை தவிர்த்துவிடுங்கள்.



Prev Topic

Next Topic