2023 புத்தாண்டு (ஐந்தாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

நவம்பர் 04, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை நல்ல பலன்கள் (75 / 100)



சனி பகவான் நவம்பர் 4, 2023 அன்று உங்கள் ராசியின் 6 ஆம் வீடான ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு இந்த பாகத்தில் வக்கிர கதி அடைகிறார். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு பெயரும் போது கேது உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். மொத்தத்தில் இந்த கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு ஒரு குறுகிய காலத்திற்கு நல்ல பலன்களைத் தரும். ஆனால் ஜனவரி 2024, 2023 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் மன உளைச்சலை சந்திப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


நீங்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்யலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நல்ல தீர்வைப் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த வேண்டும் என்றால், அதனை டிசம்பர் 15, 2023 க்கு முன் செய்துவிட முயற்சிக்கலாம். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் நீங்கள் வேலை பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும் நீங்கள் நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகளையும் தொடங்கலாம்.

உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்களுக்கு இருக்கும் கடன்களை விரைவாக அடைத்துவிடுவீர்கள். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து உங்கள் மாதாந்திர தவணையை குறைக்க இது நல்ல நேரம். பங்குச்சந்தை முதலீடுகளில் நீங்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ஆனால் டிசம்பர் 16, 2023 க்கு முன் நீங்கள் பங்குசந்தையை விட்டு வெளியேறிவிட வேண்டும். ஏனென்றால், ஜனவரி 2024 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகடத்தில் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.



Prev Topic

Next Topic