2023 புத்தாண்டு (ஒன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

ஜனவரி 01, 2023 முதல் ஜனவரி 17, 2023 வரை சிறப்பான முன்னேற்றம் (70 / 100)



இந்த புத்தாண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும், நீங்கள் உங்களுக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்சனையில் இருந்து வெளி வந்து உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த மேலும் சில வாரங்கள் ஆகலாம். ஆனால் இந்த பாகத்தில் நீங்கள் விரைவாக குணமடைவீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருந்தாலும், மீண்டும் உங்கள் உறவைப் புதுபித்துக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும் உங்கள் வாழ்க்கையில் புதிய உறவைத் தொடங்கவும் நீங்கள் தயாராவீர்கள். இது நீங்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழத் தொடங்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.


உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு மிகப் பெரிய ஆதரவாக இருப்பார்கள். கடந்த மாதங்களில் உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் நீங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளீர்ர்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். உங்கள் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் அமுதாயத்தில் நல்ல புகழையும் பெயரையும் பெறுவீர்கள். உங்கள் உத்தியோகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை பார்க்க உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்த நிலைக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான பாதையில் நீங்கள் முன்னேறிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் புதிய வேலை வாய்ப்புக்கும் முயற்சி செய்யலாம். உங்கள் வணிக வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

அதிகரிக்கும் பண வரத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்க இது ஏற்ற நேரம். நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். சூதாட்டம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களை இந்த பாகத்தில் பணக்காரராக மாற்றும். நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் மனதை அமைதிப்படுத்துவதொடு அதிக சக்தியையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.



Prev Topic

Next Topic