![]() | 2023 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | உடல்நலம் |
உடல்நலம்
குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சரியான மருந்து மற்றும் சிகிச்சை கிடைத்து நீங்கள் விரைவாக குணமடைவீர்கள். உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு சத்து மற்றும் சர்க்கரையின் அளவு குறைந்து இயல்பு நிலைக்கு வரும். உங்கள் குடும்பத்தினர்களின் உடல்நலத்தில் முன்நேரம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் சரியான உணவு முறையை பின்பற்றி உடற்பயிற்சி செய்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கலாம். மொத்தத்தில் ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.
ஆனால் ஏப்ரல் 21,. 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் அதிக சவால்களை சந்திப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 8, 2023 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உளவியல் ரீதியாக நீங்கள் பாதிக்கப்படலாம். உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ராகு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், உங்களால் இந்த கடினமான சூழலை சமாளிக்க முடியும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து நேர்மறை ஆற்றலை விரைவாகப் பெற முயற்சிக்கலாம். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பாடும்.
Prev Topic
Next Topic