2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


2023 புத்தாண்டு பலன்கள் – கன்னி ராசி (Virgo Moon Sign).
இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும், குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். சனி பகவான் உங்கள் குடும்ப சூழலில் பிரச்சனைகளை ஏற்படுத்துவார். ஆனால் சனி பகவான் உங்கள் ராசியின் 6 ஆம் வீடான ரூன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு ஜனவரி 16, 2023 அன்று பெயர்ச்சியாகிறார். எனவே, அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு நீண்ட காலத்திற்கு சனி பகவான் உங்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தருவார்.


இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகள் குறையும். ஜனவரி 16, 2023 க்கு மேல் நீங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி சார்ந்த விடயங்களில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். உங்களது நீண்ட கால கனவுகள் நிறைவேறும். சுப காரியங்கள் நிகழ்த்த இது சிறப்பான நேரமாக இருக்கும். உங்கள் பண வரத்து போதுமான அளவு இருக்கும். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல புகழையும் பெயரையும் பெரும்.
ஆனால் ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு தடைகளும் எதிர்பாராத திடீர் பின்னடைவுகளும் ஏற்படலாம். உங்கள் உடல்நலம் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் உங்களுக்கு எதிராக நடக்கும் சதிகள் மற்றும் அரசியலால் உங்கள் அலுவலகத்தில் அதிக தடைகளை சந்திப்பீர்கள். உங்கள் நிதி நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம்.


செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும். நவம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் மிதமான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் காண்பீர்கள். ஏப்ரல் 21, 2023 க்கு முன் நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் நல்ல நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சிக்க வேண்டும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெற முயற்சி செய்யுங்கள்.

Prev Topic

Next Topic