![]() | 2023 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டை பார்வை இடுவதால் நல்ல நேரத்தைப் பெறுவார்கள். உங்கள் மறைமுக எதிரிகளால் எந்த பிரச்சனைகளும் இருக்காது. உங்கள் திறமைகளை நிரூபிக்க உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல அங்கிகாரம் கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் செல்வாக்கும் புகழும் அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு சிறப்பான நிதி வெகுமதிகள் கிடைக்கும். உங்கள் படம் வெளிவர இருந்தால் அது பெரும் அளவு வெற்றியைப் பெரும். ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பொற்காலத்தைக் காண்பீர்கள்.
எதிர்பாராவிதமாக. ஏப்ரல் 21, 2023 வரை மட்டுமே உங்களால் இந்த அதிர்ஷ்டங்களைப் பெற முடியும். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் அஷ்டம குருவால் உங்களுக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்ட்டம் குறையலாம். நீங்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் ப்ராஜெக்ட் உங்களுக்கு எதிரான சதிகள் மற்றும் அரசியலால் இரத்தாகலாம். உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் இணையதள ட்ரோல்களால் நீங்கள் பாதிக்கப்படலாம். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு சற்று விடுப்பு கிடைக்கும்.
Prev Topic
Next Topic