![]() | 2023 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | இரண்டாம் பாகம் |
ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை பொற்காலம் (95 / 100)
குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும் சனி பகவான் உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு ராஜ யோகத்தை இந்த பாகத்தில் உண்டாக்குவார்கள். நீங்கள் எதை செய்தாலும் அதில் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் வளர்ச்சி தொடர்ந்து இருக்கும். உங்கள் உடல்நலம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த பாகத்தில் உங்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் காதலிக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் வாழ்க்கைக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தை இப்போது பெறுவார்கள்.
நல்ல சம்பள உயர்வுடன் உங்களுக்கு அடுத்த நிலைக்கு செல்ல பதவி உயர்வு கிடைக்கும். பெரிய நிறுவனத்தில் இருந்தும் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களது விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். உங்கள் வணிகம் சார்ந்த வளர்ச்சி மிகப் பெரிய அளவில் இருக்கும். நீங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினால் அது ஊடகத்தின் கவனத்தை ஈர்க்கும். உங்களது கடின உழைப்பிற்கான அங்கிகாரம் இந்த பாகத்தில் உங்களுக்கு கிடைக்கும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தில் நீங்கள் விண்ணைத் தொடும் லாபத்தைப் பெறுவீர்கள். நீங்கள் புது வீடு வாங்குவது அல்லது சொத்துக்களில் முதலீடு செய்வது போன்ற முயற்சிகளைச் செய்யலாம். நீங்கள் இப்போது முதலீடு செய்யும் சொத்துக்கள் அடுத்த 2 – 3 ஆண்டுகளில் பல மடங்கு மதிப்பை பெரும். நீங்கள் உங்களால் முடிந்த தானம் தர்மங்களைச் செய்து உங்கள் கர்ம வினைகளைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic