![]() | 2023 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை திடீர் பின்னடைவுகள் (40 / 100)
கடந்த மாதங்களில் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்ட்டம் குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் ஏப்ரல் 21, 2023 முதல் சஞ்சரிப்பதால் இப்போது முடிவுக்கு வரும். ராகு மற்றும் கேது உங்களுக்கு கலந்த பலன்களைத் தருவார்கள். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்தாலும் குருவால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களில் இருந்து உங்களை பாதுக்காக்க முடியாது. ஆனால் சனி பகவான் விடயங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உதவுவார். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் வலி மிகுந்த காலகட்டத்தில் இருந்தாலும் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும் என்பது தான்.
இந்த பாகத்தில் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களிடம் கடுமையான வாக்குவாதம் மற்றும் சண்டையில் ஈடுபட நேரலாம், உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்காலிகமாக பிரியும் சூழலும் ஏற்படலாம்.
உங்கள் உத்தியோக வாழ்க்கை அலுவலகத்தில் ஏற்படக்கூடிய அரசியலால் பாதிக்கப்படலாம். நீங்கள் உங்கள் மறைமுக எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் சதியால் பாதிக்கபப்டுவீர்கள். இதனால் உங்கள் மன நிம்மதியையும் நீங்கள் இழக்க நேரலாம். அலுவலகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் உங்களுக்கு எதிராக மாறலாம். அலுவலகத்தில் நீங்கள் உங்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இழக்க நேர்ந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தாமதமாகலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் மாற்றம் செய்ய முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிகரிக்கும் செலவுகளால் உங்கள் சேமிப்பு பாதிக்கப்படலாம். நீங்கள் பண விடயங்களில் உங்களது நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களாலேயே மிகவும் மோசமாக ஏமாற்றப்படலாம். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவதையோ அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்துவிட வேண்டும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. கட்டுமான பணிகளைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை. புதிய கட்டிடம் அல்லது வீடு கட்ட முன் தொகை கொடுப்பதற்கு முன் நீங்கள் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். பங்குச்சந்தை வர்த்தகம் இந்த பாகத்தில் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.
Prev Topic
Next Topic