2023 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்



ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் பங்குச்சந்தை முதலீடுகளில் பொற்காலத்தை காண்பீர்கள். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் இந்த காலகட்டத்தில் உங்களை பணக்காரராக மாற்றும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. ஆனால் உங்கள் வளர்ச்சியின் வேகமும் அளவும் உங்கள் பிறந்த சாதக பலனைச் சார்ந்தே உள்ளது. உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் 2023 இன் முதல் சில மாதங்களிலேயே பணக்காரராகும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.


புது வீடு வாங்குவதிலும் மற்றும் முதலீடு சார்ந்த சொத்துக்கள் வாங்குவதிலும் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள், சூதாட்டம், அதிர்ஷ்ட்ட சீட்டு மற்றும் வழக்கு அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு பெரியத் தொகை செட்டில்மென்ட்டாகப் பெறுவது போன்ற அதிஷ்ட்டம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏப்ரல் 21, 2023 ஐ நீங்கள் அடைவதற்குள் ரிஸ்க் உள்ள முதலீடுகள் மற்றும் பங்குகளை வைத்துருப்பதை குறைத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 21, 2023 முதல் குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவது உங்களுக்கு முதலீடு சார்ந்த விடயங்களுக்கு ஒரு சிகப்புக் கொடியாக இருக்கும். நீங்கள் கவனமாக இல்லை என்றால், நீங்கள் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை விரைவாக இழந்து ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நிதி இழப்புகளை சந்திக்கும் சூழல் ஏற்படலாம். நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்திலும் முதலீடுகளிலும் பெரும் அளவு பணத்தை இழக்கும் நிலை ஏற்படலாம். ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். செப்டம்பர் 4, 2023 க்கு பிறகு உங்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் ஆனால் எந்த அதிர்ஷ்டத்தையும் எதிர்பார்க்க முடியாது.



Prev Topic

Next Topic