2023 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்


நீண்ட தூர பயணம் ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான பலனைத் தரும். உங்களுக்கு பயண சீட்டு, வாடகைக்கு கார் மற்றும் ஹோட்டல் போன்றவற்றில் முன்பதிவு செய்வதில் நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல தங்கும் வசதிகள் கிடைக்கும். புது கார் வாங்க இது நல்ல நேரம். பயணம் செய்வதில் மற்றும் வெளிநாட்டிற்கு குடிபெயருவதில் நீங்கள் மகிழ்ச்சியான சூழலைக் காண்பீர்கள். நிலுவையில் இருக்கும் குடியேற்றப் பலன்கள் மற்றும் விசா சார்ந்த விடயங்களில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். வெளிநாட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரம்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அஷ்டம குருவின் தாக்கம் இந்த காலகட்டத்தில் அதிகம் உணரப்படலாம். உங்கள் உடல்நலம் இந்த காலகட்டத்தில் பயணத்தின் போது பாதிக்கப்படலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்றம் சார்ந்த பலன்களில் தேக்க நிலை ஏற்படலாம். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து உங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் சூழல் ஏற்படலாம்.


செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் பயணம் உங்களுக்கு கலந்த பலன்களைத் தரும். புண்ணிய தளங்கள் செல்லவும் இது நல்ல நேரம். உங்கள் பிறந்த சாதகத்தின் பலனைச் சார்ந்து உங்கள் வணிகம் சார்ந்த பயணம் உங்களுக்கு வெற்றியைத் தரும்.


Prev Topic

Next Topic