2023 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

வேலை / உத்தியோகம்


குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் உங்கள் உத்தியோக வளர்ச்சியில் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது நல்ல நேரம். 2023 இன் தொடக்கத்தில் உங்களுக்கு புது வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் உங்களுக்கு வேலை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் உங்கள் உத்தியோக வளர்ச்சிக்கு உங்களுக்கு நல்ல ஆதரவாக இருப்பார்கள். நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்த பதவி உயர்வு தற்போது உங்களுக்கு கிடைக்கும்.
ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல சம்பள உயர்வு மற்றும் போனஸ் கிடைக்கும். வெளிநாட்டிற்கு குடிபெயரவும் இது நல்ல நேரம். உங்கள் விசா மற்றும் குடியேற்றம் சார்ந்த பலன்கள் மேலும் எந்த தாமதமும் இன்றி ஒப்புதல் பெரும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு உங்களுக்கு இடமாற்றமும் கிடைக்கும். நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் உத்தியோகத்தில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சிக்கலாம்.


எதிர்பாராவிதமாக ராகு மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் அலுவலகத்தில் உங்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகளும் மற்றும் உங்களுக்கு எதிரான சதிகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் மீதான தவறான குற்றச்சாட்டால் நீங்கள் பாதிக்கப்படலாம் மேலும் இதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு HR சார்ந்த சிக்கல்களும், குறிப்பாக பாகுபாடு, அவமானப்படுத்துதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட சற்று வாய்புகள் கிடைக்கும். நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அலுவலகத்தில் உங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களுடன் உங்கள் உறவை நல்ல நிலையில் முன்னேற்றிக்கொள்ள முயற்சிக்கலாம். உங்களுக்கு தற்போது சரியான உத்தியோகம் இல்லாமல் இருந்தால், செப்டம்பர் 4, 2023 முதல் நீங்கள் புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்கலாம்.



Prev Topic

Next Topic