சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 (Sani Peyarchi Rasi Palangal) by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சனி பெயர்ச்சி திரு கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 23, 2020 முற்பகல் 9:24 மணியளவில் இந்திய நேரப்படி நடக்கிறது. சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகின்றார். சனி பகவான் திரு கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 16, 2023 மாலை 4:18 மணி வரை மகர ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.

சனி பெயர்ச்சி கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 23, 2020 பிற்பகல் 2:09 மணியளவில் இந்திய நேரப்படி நடக்கிறது. சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகின்றார். சனி பகவான் கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 16, 2023 இரவு 9:16 மணி வரை மகர ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.

சனி பெயர்ச்சி லஹிரி பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 24, 2020 முற்பகல் 9:52 மணியளவில் இந்திய நேரப்படி நடக்கிறது. சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகின்றார். சனி பகவான் லஹிரி பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17, 2023 மாலை 6:00 மணி வரை மகர ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் மார்ச் 28, 2020 அன்று மகர ராசிக்கு மாறினாலும், பல முறை வக்கிரம் மற்றும் வக்கிர நிவர்த்தி அடைந்து மகர ராசிக்கும், தனுசு ராசிக்கும் இடம் மாறுகிறார். சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 16, 2020-ம் தேதி இந்திய நேரப்படி நடக்கிறது. சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகின்றார். சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 03, 2023 வரை மகர ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.

எப்போதும் திரு கணித பஞ்சாங்கம், லஹிரி பஞ்சாங்கம், கேபி பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சிறிது நேரம் வித்தியாசம் இருக்கும். ஆனால் நான் எப்போதும் கேபி (கிருஷ்ணமூர்த்தி) பஞ்சாங்கத்தின் படி சனி பெயர்ச்சி கணிப்புகளை எழுதியுள்ளேன் - KT ஜோதிடர்.

குறிப்பு: சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு அதி சாரமாக ஏப்ரல் 28, 2022 முதல் ஜூலை 14, 2022 வரை சென்று வருகிறார்.

சனி பகவான் உத்திராடம் நக்ஷத்திரத்தில்: ஜனவரி 23, 2020 முதல் மே 11, 2020
சனி பகவான் (வக்கிரம்) உத்திராடம் நக்ஷத்திரத்தில்: மே 11, 2020 முதல் செப்டம்பர் 29, 2020
சனி பகவான் உத்திராடம் நக்ஷத்திரத்தில்: செப்டம்பர் 29, 2020 முதல் ஜனவரி 21, 2021

சனி பகவான் திருவோணம் நக்ஷத்திரத்தில்: ஜனவரி 21, 2021 முதல் மே 23 2021
சனி பகவான் (வக்கிரம்) திருவோணம் நக்ஷத்திரத்தில்: மே 23 2021 முதல் அக்டோபர் 11, 2021
சனி பகவான் திருவோணம் நக்ஷத்திரத்தில்: அக்டோபர் 11, 2021 முதல் பிப்ரவரி 17, 2022

சனி பகவான் அவிட்டம் நக்ஷத்திரத்தில்: : பிப்ரவரி 17, 2022 முதல் ஏப்ரல் 28, 2022
சனி பகவான் அவிட்டம் நக்ஷத்திரத்தில்: ஏப்ரல் 28, 2022 முதல் ஜூன் 05, 2022 [கும்ப ராசி]
சனி பகவான் (வக்கிரம்) அவிட்டம் நக்ஷத்திரத்தில்: ஜூன் 05, 2022 முதல் ஜூலை 14, 2022 [கும்ப ராசி]
சனி பகவான் (வக்கிரம்) அவிட்டம் நக்ஷத்திரத்தில்: ஜூலை 14, 2022 முதல் அக்டோபர் 23, 2022
சனி பகவான் அவிட்டம் நக்ஷத்திரத்தில்: அக்டோபர் 23, 2022 முதல் ஜனவரி 16, 2023

இந்த சனி பெயர்ச்சியின் யோக பலன்களை விருச்சிக ராசி, மீன ராசி மற்றும் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அனுபவிப்பார்கள்.
இந்த சனி பெயர்ச்சியின் நல்ல பலன்களை மேஷ ராசி, ரிஷப ராசிமற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் அனுபவிப்பார்கள்.
இந்த சனி பெயர்ச்சியின் நல்லதும் கெட்டதும் கலந்த பலன்களை கடக ராசி, கன்னி ராசி மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்கள் அனுபவிப்பார்கள்.
இந்த சனி பெயர்ச்சியின் மோசமான பலன்களை மிதுன ராசி, துலா ராசி மற்றும் மகர ராசியில் பிறந்தவர்கள் அனுபவிப்பார்கள்.



Prev Topic

Next Topic



Click here for Latest Updates in YouTube



Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.