![]() | சனி பெயர்ச்சி (2020 - 2023) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Sani Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை கலவையான பலன்கள் (50 / 100)
சனி பகவானும் மற்றும் பிற முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். விடயங்கள் அனைத்தும் உங்கள் கட்டுபாட்டிற்குள் இருப்பதால், நீங்கள் பயம் கொள்ளத் தேவை இல்லை. உடல் நலம், குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த விசயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எனினும், உங்கள் அலுவலக வாழ்க்கை மற்றும் நிதி நிலையில் வளர்ச்சி குறித்த விசயங்களில் அதிர்ஷ்டம் குறைவாகவே இருக்கும். உங்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். எனினும், நிதி பிரச்சனைகளால் சற்று மன அழுத்தம் இருக்கக் கூடும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
உங்கள் காதல் குறித்த விடயங்கள் மகிழ்ச்சியைத் தரும். எனினும், உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் அதிக கவனம் செலுத்துவதால், காதல் சற்று குறைந்து காணப்படும். உங்கள் அலுவலக வாழ்க்கை பெரிய அளவு பாதிக்கப்படும். உங்கள் அலுவலகத்தில் உங்கள் பதவிக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. எனினும், உங்கள் உத்தியோகம் ராகு மற்றும் சனி பகவானின் பலத்தால் பாதுகாப்பாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் உஞளுக்கு எதிராக சில அரசியலை உண்டாக்கக் கூடும். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்தே அனைத்து விடயங்களையும் நீங்கள் கவனத்தோடு கையாள வேண்டும்.
அதிக செலவுகள் உண்டாவதால், உங்கள் சேமிப்பு பாதிக்கக் கூடும். உங்கள் நிதி குறித்து எந்த முக்கிய முடிவுகளையும் தற்போது எடுப்பது நல்ல யோசனையாக இருக்காது. எந்த விதமான, வாங்கல் / விற்றல் போன்ற ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அடுத்த 2021 ஆண்டு ரியல் எஸ்டேட் குறித்த விடயங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் மகா தசை சாதகமாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic