சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 (Sani Peyarchi Rasi Palangal) by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2023 -2025 சனி பெயர்ச்சி பலன்கள்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பெயர்ச்சி (Sani Peyarchi) ஜனவரி 16, 2023 அன்று இந்திய நேரப்படி மாலை 4:18 மணிக்கு நடைப்பெறுகிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி மார்ச் 28, 2025 இந்திய நேரப்படி இரவு 9:55 வரை அங்கேயே சஞ்சரிப்பார்.

கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பெயர்ச்சி (Sani Peyarchi) ஜனவரி 16, 2023 அன்று இந்திய நேரப்படி இரவு 9:16 மணிக்கு நடைப்பெருகிறது. கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி மார்ச் 29, 2025 இந்திய நேரப்படி காலை 2:31 வரை அங்கேயே சஞ்சரிப்பார்.

லஹரி பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பெயர்ச்சி (Sani Peyarchi) ஜனவரி 17, 2023 இந்திய நேரப்படி மாலை 6:௦௦ மணிக்கு நடைப்பெருகிறது. லஹரி பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி மார்ச் 29, 2025 இந்திய நேரப்படி இரவு 9:41 வரை அங்கேயே சஞ்சரிப்பார்.

வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பகவான் பெப்ரவரி 13 2022 அன்று பெயர்ச்சியாகிறார்.

திருக்கணித பஞ்சாங்கம், லஹரி பஞ்சாங்கம், கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் ஆகிய இவற்றிற்கிடையே எப்போது கால அளவில் சற்று வேறுபாடுகள் இருக்கும். ஆனால், நான் எப்போதும் கிருஷ்ண மூர்த்தி பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே பெயர்ச்சி பலன்களைக் கணிக்கின்றேன்.

கும்ப ராசியில் வெவ்வேறு நட்சத்திரங்களில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

சனி அவிட்டம் (Dhanista) நட்சத்திரத்தில்: ஜனவரி. 16, 2023 முதல் மார்ச் 15, 2023 வரை.
சனி சதயம் நட்சத்திரத்தில்: மார்ச் 15, 2023 முதல் ஜூன் 17, 2023 வரை.

சனி சதயம் நட்சத்திரத்தில் (வக்கிரம்): ஜூன் 17 2023 முதல் அக்டோபர் 15, 2023 வரை.
சனி அவிட்டம் (Dhanista) நட்சத்திரத்தில் (வக்கிரம்): அக்டோபர் 15, 2023 முதல் நவம்பர் 04, 2023 வரை.

சனி அவிட்டம் (Dhanista) நட்சத்திரத்தில்: நவம்பர் 04, 2023 முதல் நவம்பர் 24, 2023 வரை.
சனி சதயம் நட்சத்திரத்தில்: நவம்பர் 24, 2023 முதல் ஏப்ரல் 6, 2024 வரை.
சனி பூரட்டாதி (Purva Bhadrapada) நட்சத்திரத்தில்: ஏப்ரல் 6, 2024 முதல் ஜூன் 29, 2024 வரை.

சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் (வக்கிரம்): ஜூன் 29, 2024 முதல் அக்டோபர் 03, 2024 வரை.
சனி சதயம் நட்சத்திரத்தில் (வக்கிரம்): அக்டோபர் 03, 2024 முதல் நவம்பர் 15, 2024 வரை.

சனி சதயம் நட்சத்திரத்தில்: நவம்பர் 15, 2024 முதல் டிசம்பர் 27, 2024 வரை
சனி பூரட்டாதி (Purva Bhadrapada) நட்சத்திரத்தில்: டிசம்பர் 27, 2024 முதல் மார்ச் 28, 2025 வரை

தற்போது நிகழும் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தின் போது வெவ்வேறு ராசிகளில் நிகழும் குரு பெயர்ச்சி காலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மீன ராசியில் குரு: ஜனவரி 16, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை.
மேஷ ராசியில் குரு: ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை.
மேஷ ராசியில் குரு (வக்கிரம்): செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 30, 2023 வரை.
மேஷ ராசியில் குரு: டிசம்பர் 30, 2023 முதல் மே 1, 2024 வரை.
ரிஷப ராசியில் குரு: மே 1, 2024 முதல் அக்டோபர் 9, 2024 வரை.
ரிஷப ராசியில் குரு (வக்கிரம்): அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை.
ரிஷப ராசியில் குரு: பிப்ரவரி 4, 2025 முதல் மார்ச் 28, 2025 வரை.

தற்போது நிகழும் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தின் போது வெவ்வேறு ராசிகளில் நிகழும் ராகு / கேது பெயர்ச்சி காலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மேஷ ராசியில் ராகு: ஜனவரி 16, 2023 முதல் நவம்பர் 01, 2023 வரை.
மீன ராசியில் ராகு: நவம்பர் 01, 2023 முதல் மார்ச் 28, 2025 வரை.
துலாம் ராசியில் கேது: ஜனவரி 16, 2023 முதல் நவம்பர் 01, 2023 வரை.
கன்னி ராசியில் கேது: நவம்பர் 01, 2023 முதல் மார்ச் 28, 2025 வரை.

இந்த சனிப்பெயர்ச்சி மேஷம் ராசி (Aries), கன்னி ராசி (Virgo), தனுசு ராசி (Sagittarius) ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
இந்த சனிப்பெயர்ச்சி மிதுன ராசி (Gemini), துலாம் ராசி (Libra) மற்றும் மகரம் ராசி (Capricorn) ஆகிய ராசிக்காரர்களுக்கு சுமாரான ஓரளவுப் பலன்களைத் தரும்.
இந்த சனிப் பெயர்ச்சி ரிஷப ராசி (Taurus), சிம்ம ராசி (Leo), மீன ராசி (Pisces) ஆகிய ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களைத் தரும்.
இந்த சனிப் பெயர்ச்சி விருச்சிக ராசி (Scorpio), கும்ப ராசி (Aquarius), கடக ராசி (Cancer) ஆகிய ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான பலன்களைத் தரும்.


இந்த சனிப்பெயர்ச்சி கணிப்புகளை நான் 9 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு ராசிக்குமான பலன்களை எழுதியுள்ளேன்.

முதல் பாகம்: ஜனவரி 16, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
இரண்டாவது பாகம்: ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை (ஜூன் 17, 2023 அன்று சனி பகவான் வக்கிர கதி அடைகிறார்)
மூன்றாவது பாகம்: செப்டம்பர் 04, 2023 முதல் நவம்பர் 04, 2023 வரை
நான்காவது பாகம்: நவம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 30, 2023 வரை
ஐந்தாவது பாகம்: டிசம்பர் 30, 2023 முதல் மே 01, 2024 வரை
ஆறாவது பாகம்: மே 01, 2024 முதல் அக்டோபர் 09, 2024 வரை (ஜூன் 29, 2024 அன்று சனி பகவான் வக்கிர கதி அடைகிறார்)
ஏழாவது பாகம்: அக்டோபர் 09, 2024 முதல் நவம்பர் 15, 2024 வரை
எட்டாவது பாகம்: நவம்பர் 15, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை
ஒன்பதாவது பாகம்: பிப்ரவரி 4, 2025 முதல் மார்ச் 28, 2025 வரை

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.