குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 (Guru Peyarchi Rasi Palangal) by KT ஜோதிடர்
Click here for Latest Updates in YouTube

கண்ணோட்டம்



குரு பெயர்ச்சி / (Guru Peyarchi) திரு கணித பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை நவம்பர் 4, 2019 2:39 PM இந்திய நேரப்படி விருச்சிக (Vrischika Rasi) ராசியில் இருந்து தனுசு (Dhanushu Rasi) ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் நவம்பர் 20, 2020 9:15 PM வரை தனுசு (Dhanushu Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார்.

குரு பெயர்ச்சி / (Guru Peyarchi) கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை நவம்பர் 4, 2019 5:29 PM இந்திய நேரப்படி விருச்சிக (Vrischika Rasi) ராசியில் இருந்து தனுசு (Dhanushu Rasi) ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் நவம்பர் 20, 2020 00:21 AM வரை தனுசு (Dhanushu Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார்.

குரு பெயர்ச்சி / (Guru Peyarchi) லஹிரி பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை நவம்பர் 5, 2019 5:15 AM இந்திய நேரப்படி விருச்சிக (Vrischika Rasi) ராசியில் இருந்து தனுசு (Dhanushu Rasi) ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் நவம்பர் 20, 2020 1:20 PM வரை தனுசு (Dhanushu Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார்.

குரு பெயர்ச்சி / (Guru Peyarchi) வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை அக்டோபர் 29, 2019 4:25 AM இந்திய நேரப்படி விருச்சிக (Vrischika Rasi) ராசியில் இருந்து தனுசு (Dhanushu Rasi) ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் வரை நவம்பர் 15, 2020 10:06 PM தனுசு (Dhanushu Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார்.

எப்போதும் திரு கணித பஞ்சாங்கம், லஹிரி பஞ்சாங்கம், கேபி பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சிறிது நேரம் வித்தியாசம் இருக்கும். ஆனால் நான் எப்போதும் கேபி (கிருஷ்ணமூர்த்தி) பஞ்சாங்கத்தின் படி குரு பெயர்ச்சி கணிப்புகளை எழுதியுள்ளேன் - KT ஜோதிடர்.

சிறப்பு குறிப்பு: குரு பகவான் மார்ச் 30, 2020 முதல் 90 நாட்களுக்கு மகர (Makara Rasi) ராசியில் அதி சாரமாக சஞ்சரிக்கிறார். குரு பகவான் வக்கிரம் அடைந்து மீண்டும் ஜூன் 30, 2020 -ம் தேதி தனுசு ராசியை வந்தடைகிறார்.



ஜனவரி 23, 2020 அன்று சனியும் தனுஷ் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார் . சனி பகவான் ஜனவரி 16, 2023 வரை மகர ராசியில் தங்கியிருபார். சனி 2022 ஆம் ஆண்டில் ஆதி-சாரமாக சிறிது நேரம் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். ராகு மிதுனா ராசியிலும் மற்றும் கேது தனுஷு ராசியிலும் செப்டம்பர் 25, 2020 வரை இருப்பார், பின்னர் முறையே ரிஷப ராசி மற்றும் விருச்சிக ராசிக்கு பின்னோக்கி செல்வார்கள்.


இந்த குரு பெயர்ச்சி கல கட்டத்தில் இருக்கும் முக்கியமான கிரக அம்சங்கள்:

1. குரு, சனி மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் தனுஷு ராசியில் நவம்பர் 04, 2019 முதல் ஜனவரி 23, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள்.

2. குரு, செவ்வாய் மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் தனுஷு ராசியில் பெப்ரவரி 08, 2020 முதல் மார்ச் 22, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள்.

3. குரு, சனி மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் மகர ராசியில் மார்ச் 30, 2020 முதல் மே 05, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள். குரு பகவான் மகர ராசியில் அதி சாரமாக 90 நாட்களுக்கு மார்ச் 30, 2020 வரை சஞ்சரிப்பார்.

4. சுக்கிர பகவான் மே 13, 2020 முதல் ஜூன் 25, 2020 வரை வக்கிரம் பெற்று சஞ்சரிப்பார்.

5. செவ்வாய் செப்டம்பர் 9, 2020 முதல் நவம்பர் 14, 2020 வரை வக்கிரம் பெற்று சஞ்சரிப்பார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 3, 2020 அன்று நடைபெறுவது குறிப்பிடதக்கது.


கிரகங்கள் தங்களது சேர்க்கை மற்றும் வக்கிரம் என்று குறுகிய கல கட்டத்தில் மாறி மாறி சஞ்சரிப்பதால், மக்களின் அதிர்ஷ்டங்கள் அடுத்த ஓராண்டு கல கட்டத்திற்கு அடிகடி மாறுபடும்.

மேஷ ராசி, மிதுன ராசி, சிம்ஹா ராசி, விருச்சிகா ராசி, கும்ப ராசி மற்றும் மீன ராசி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்
கடக ராசி மற்றும் துலா ராசியில் பிறந்தவர்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்த பலன்கள் கிடைக்கும்.
ரிஷப ராசி, கன்னி ராசி, தனுஷு ராசி மற்றும் மகர ராசி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு மோசமான பலன்கள் கிடைக்கும்.

குறிப்பாக பங்குச் சந்தையில் பாரிய ஏற்ற இறக்கம் தவிர வேறு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்காது. பங்குச் சந்தை குறியீடுகளும், வீட்டு விலைகளும் மந்த நிலை அடுத்த ஓராண்டு காலத்திற்கு நீடிக்கும்.





Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.