2019 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களுக்கு சாதகமான நிலையை காட்டுகிறது. ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரித்து நல்ல பலன்களை தருவார்கள். புதன் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து கலவையான பலன்களை தருவார்.
ஏழரை சனியின் தாக்கம் இந்த மாதம் குறைவாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு நல்ல பலன்களை தருவார். குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைவதால் நல்ல பலன்களை நீங்கள் எதிர் பார்க்கலாம். மொத்தத்தில் இந்த மாதம் கடந்த மாதங்களை விட நீண்ட காலத்திற்கு பிறகு உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். இந்த மாதத்தை பயன் படுத்தி நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic