![]() | 2019 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு இந்த மாதம் சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிலும், குரு 4ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியைத் தருவார்கள். எனினும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் அதிக பதற்றம் மற்றும் உடல் நல பிரச்சனைகள் ஏற்படக் கூடும். புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை.
சனி பகவான் மற்றும் கேது இணைந்து சஞ்சரிப்பதால் அதிக பிரச்சனைகளை உறவுகளுக்கு இடையில் தரக் கூடும். இதனால் இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் உடல் நலம், குடும்பம் மற்றும் உறவுகள் ஆகிய விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எனினும் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
உங்கள் சொந்த பிரச்சனைகளின் தாக்கம் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அதிகரிக்கக் கூடும். நீங்கள் கவனமாக இல்லை என்றால் நீங்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அதிக உணர்ச்சி வசப்பட்டு அதனால் பாதிப்புகளை அடையக் கூடும். ஆகஸ்ட் 29, 2019 முதல் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் உங்கள் உத்தியோகத்தில் ஆர்வத்தை குறைத்து மற்றும் நிதி நிலையையும் பாதிக்கக் கூடும்.
Prev Topic
Next Topic