2019 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


மே 15, 2019 அன்று சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயருகிறார் இந்த மாதம் .புதன் மேஷ ரசி மற்றும் ரிஷப ராசியில் அநேக நாட்கள் சஞ்சரிப்பார். உச்சம் பெரும் சுக்கிரன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மே 10, 2019 அன்று பெயருகிறார். செவ்வாய் மே 7, 2019 அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயருகிறார்.
ராகு மிதுன ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிப்பார்கள். வக்கிர கதி அடையும் குரு பின்னோக்கி பெயர்ந்து விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். வக்கிர கதி அடையும் சனி பகவான் பின்னோக்கி நகர்ந்து தனுசு ராசியில் சஞ்சரிப்பார். முக்கிய கிரகங்களான ராகு, கேது, குரு அல்லது சனிபகவான் இந்த மாதம் வக்கிர கதி அடைகிறார்கள்.
சனி பகவான் மற்றும் கேது மே 23, 2019 அன்று இணைந்து சஞ்சரிக்கிறார்கள். இந்த நாளில்தான் இந்தியாவில் லோக் சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அனேக மக்களுக்கு இந்த தேர்தலின் முடிவுகள் ஆச்சரியம் தரும் வண்ணமும் ஏமாற்றம் தரக்கூடியதாகவும் இருக்கும். இந்த சனி பகவான் மற்றும் கேது இணைந்து சஞ்சரிக்கும் காலத்தில் தற்போதிய பிரதமர் மோடி கடுமையான காலகட்டத்தை சந்திக்க நேரிடலாம். அவர் மீண்டும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் படாமல் போகலாம் அல்லது எந்த கட்சியும் அரசிடம் இருந்து பெரும்பாலான ஆதரவை பெறாமல் போகலாம்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.