2019 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதத்தின் முதல் பாதி சாதகமான நிலையை காட்டுகின்றது. புதன் 7ஆம் வீட்டிற்கு பெயருவது சிறப்பாக இல்லை. சுக்கிரன் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சாதகமற்ற நிலையில் சஞ்சரித்து, உடல் உபாதைகள் மற்றும் உங்கள் உறவுகளுக்கிடையே மன உளைச்சலை உண்டாக்கக் கூடும்.
சனி பகவான் மற்றும் கேது இணைந்து சஞ்சரிபப்தால் ஏற்படும் தாக்கம் கடுமையாக இருக்கக் கூடும். இதனால் உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம் . மேலும் ராகு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சாதகமற்ற பலன்களை தரக் கூடும். மேலும் வலி மிகுந்த சூழல்களை உண்டாக்கக் கூடும்.
செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மட்டுமே இந்த மாதம் உங்களுக்கு சாதகமான ஒரு விடயமாகும். அக்டோபர் 24, 2019 வரை இருக்கும் இந்த கடுமையான சோதனை காலகட்டத்தை கடக்க வேண்டும் என்றால் உங்கள் மனோ பலத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அக்டோபர் 24, 2019 கடந்து விட்டால், நவம்பர் 04, 2019 அன்று ஏற்படும் குருபெயற்சியோடு குருவின் தாக்கம் குறையும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.